உயர்கல்வி வழிகாட்டி

🎓 வழிகாட்டி முகப்பு

ஒருங்கிணைந்த உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டல் & உதவி மையம்

Integrated Higher Education Admissions, Cut-off & Helpline Portal
Toll-Free 24x7 📞
பள்ளிக் கல்வி உதவி மையம்
14417

அனைத்து நுழைவுத் தேர்வுகள், சேர்க்கை கலந்தாய்வு, உதவித்தொகை & அரசு நலத்திட்ட நேரடி ஆலோசனை.

📞 இப்போது அழைக்க (Call 14417)
Mental Wellness 🧠
மனநல & தேர்வு ஆலோசனை
14416 / 104

Tele-MANAS & நல்வாழ்வுத்துறை மூலம் பொதுத்தேர்வு அச்சம், மன அழுத்தம் மற்றும் தன்னம்பிக்கை வழிகாட்டல்.

🛡️ ஆலோசனையைப் பெற
Childline National 🛡️
குழந்தைகள் உதவி மையம்
1098

மாணவர் பாதுகாப்பு, குழந்தை உரிமைகள் மற்றும் பள்ளி இடைநிற்றல் தடுப்புக்கான இலவச உதவி மையம்.

📞 1098 தொடர்பு கொள்க
District Cell 🎓
மாவட்ட உயர்கல்வி வழிகாட்டி மையம்

மாவட்ட ஆட்சியரகம், சிவகங்கை & வழிகாட்டும் குழு (Guide Teachers Team).

🧮 உயர்கல்வி சேர்க்கை கட்-ஆஃப் கால்குலேட்டர் (Academic Cut-off Tools)

பொறியியல் (TNEA), துணை மருத்துவம் (Paramedical), வேளாண்மை (TNAU), கால்நடை (TANUVAS), கலை & அறிவியல் (TNGASA), சட்டம் மற்றும் பாலிடெக்னிக் சேர்க்கை கட்-ஆஃப் கணக்கீடு:

📐 அண்ணா பல்கலைக்கழக பொறியியல் நேரடிச் சேர்க்கை (TNEA) கட்-ஆஃப்
சூத்திரம்: கணிதம் (100) + [இயற்பியல் ÷ 2 (50)] + [வேதியியல் ÷ 2 (50)] = 200 மதிப்பெண்கள்
உங்கள் பொறியியல் சேர்க்கை கட்-ஆஃப் (200-க்கு):
0.00
மதிப்பெண்களை உள்ளிடவும்
🔬 அரசு கலை அறிவியல் கல்லூரி B.Sc அறிவியல் கட்-ஆஃப் (TNGASA)
சூத்திரம்: 4 முதன்மை பாடங்களின் கூட்டுத்தொகை (Core 4 Subjects Total) = 400 மதிப்பெண்கள்
உங்கள் B.Sc அறிவியல் கட்-ஆஃப் (400-க்கு):
0.00
மதிப்பெண்களை உள்ளிடவும்
💼 வணிகவியல் & மேலாண்மை கட்-ஆஃப் (B.Com, BBA)
சூத்திரம்: வணிகவியல் + கணக்குப்பதிவியல் + பொருளியல் + வணிகக் கணிதம்/கணினிப் பயன்பாடுகள் = 400 மதிப்பெண்கள்
உங்கள் B.Com / BBA கட்-ஆஃப் (400-க்கு):
0.00
மதிப்பெண்களை உள்ளிடவும்
⚖️ 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு (TNDALU B.A. LL.B. / B.Com LL.B.)
சூத்திரம்: மொழிப்பாடங்கள் தவிர்த்த 4 முதன்மை பாடங்களின் கூட்டுத்தொகை = 400 மதிப்பெண்கள் (Aggregate %)
உங்கள் சட்ட சேர்க்கை கட்-ஆஃப் (400-க்கு):
0.00
மதிப்பெண்களை உள்ளிடவும்
🩺 தமிழ்நாடு அரசு துணை மருத்துவப் படிப்புகள் (Paramedical / Allied Health) கட்-ஆஃப்
சூத்திரம்: உயிரியல் (100) + [(இயற்பியல் + வேதியியல்) ÷ 2 (100)] = 200 மதிப்பெண்கள் (B.Pharm, B.Sc Nursing, BPT, etc.)
உங்கள் துணை மருத்துவ கட்-ஆஃப் (200-க்கு):
0.00
மதிப்பெண்களை உள்ளிடவும்
🌾 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU B.Sc Agri / B.Tech) கட்-ஆஃப்
சூத்திரம்: [இயற்பியல் (50)] + [வேதியியல் (50)] + [உயிரியல் (50)] + [கணிதம் (50)] = 200 மதிப்பெண்கள்
உங்கள் வேளாண்மை கட்-ஆஃப் (200-க்கு):
0.00
மதிப்பெண்களை உள்ளிடவும்
🐾 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக (TANUVAS B.V.Sc & A.H) கட்-ஆஃப்
சூத்திரம்: உயிரியல் (100) + [(இயற்பியல் + வேதியியல்) ÷ 2 (100)] = 200 மதிப்பெண்கள்
உங்கள் கால்நடை மருத்துவ கட்-ஆஃப் (200-க்கு):
0.00
மதிப்பெண்களை உள்ளிடவும்
⚙️ பாலிடெக்னிக் டிப்ளமோ சேர்க்கை (10-ஆம் வகுப்பு அடிப்படையில்)
சூத்திரம்: 10-ஆம் வகுப்பு மொத்த மதிப்பெண் ÷ 5 = சதவீதம் (Percentage out of 100)
உங்கள் டிப்ளமோ சேர்க்கை சதவீதம் (100%):
0.00%
மதிப்பெண்ணை உள்ளிடவும்
📊அனைத்துப் படிப்புகளுக்குமான கட்-ஆஃப் & மதிப்பெண் கணக்கிடும் முறைகள் (சுருக்க வழிகாட்டி):
படிப்பு / சேர்க்கை வாரியம் அடிப்படைத் தகுதி கட்-ஆஃப் கணக்கிடும் அதிகாரப்பூர்வ சூத்திரம் மொத்த கட்-ஆஃப்
📐 பொறியியல் (TNEA) +2 கணிதம், இயற்பியல், வேதியியல் கணிதம் (100) + [இயற்பியல் ÷ 2 (50)] + [வேதியியல் ÷ 2 (50)] 200-க்கு
🩺 துணை மருத்துவம் (Paramedical) +2 உயிரியல் / தாவரம்+விலங்கியல், இயற்பியல், வேதியியல் உயிரியல் (100) + [(இயற்பியல் + வேதியியல்) ÷ 2 (100)] 200-க்கு
🌾 வேளாண்மை (TNAU B.Sc Agri) +2 அறிவியல் பாடங்கள் [இயற்பியல் (50)] + [வேதியியல் (50)] + [உயிரியல்/தாவரவியல் (50)] + [கணிதம்/விலங்கியல்/கணினி (50)] 200-க்கு
🐾 கால்நடை மருத்துவம் (TANUVAS BVSc) +2 உயிரியல், இயற்பியல், வேதியியல் உயிரியல் (100) + [(இயற்பியல் + வேதியியல்) ÷ 2 (100)] 200-க்கு
🔬 அரசு கலை & அறிவியல் (TNGASA B.Sc) +2 அறிவியல் முதன்மைப் பாடங்கள் 4 முதன்மை அறிவியல் பாடங்களின் கூட்டுத்தொகை (மொழிப்பாடங்கள் நீங்கலாக) 400-க்கு
💼 வணிகவியல் (B.Com / BBA) +2 வணிகவியல், கணக்குப்பதிவியல் கணக்குப்பதிவியல் + வணிகவியல் + பொருளியல் + வணிகக் கணிதம்/கணினி 400-க்கு
⚖️ சட்டம் (TNDALU 5-Year Law) +2 ஏதேனும் ஒரு பிரிவு 4 முக்கியப் பாடங்களின் மொத்த மதிப்பெண் சதவீதம் (%) (மொழிப்பாடங்கள் நீங்கலாக) 100 %
⚙️ பாலிடெக்னிக் டிப்ளமோ (10th) 10-ஆம் வகுப்பு தேர்ச்சி 10-ஆம் வகுப்பு 5 பாடங்களின் மொத்த மதிப்பெண் 500-க்கு
🏆 விளையாட்டு வீரர்கள் பிரிவு (Sports Quota) அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுச் சான்றிதழ்கள் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு 1 சிறந்த சான்றிதழ்: சர்வதேச (1000/750/500/250), தேசிய (190/160/130/50), மாநில (95/80/65/20), மாவட்ட (45/30/15/5) சான்றிதழ் கூட்டு மதிப்பெண்

🏆 தமிழ்நாடு மருத்துவ & தொழிற்கல்வி விளையாட்டு வீரர்கள் (Sports Quota) சான்றிதழ் மதிப்பெண் கால்குலேட்டர்

SDAT, மருத்துவக் கல்வி இயக்ககம் (DME) & அண்ணா பல்கலைக்கழக (TNEA) விதிகளின்படி கேந்திரிய வித்யாலயா (KVS), சிபிஎஸ்இ (CBSE), சர்வதேச, தேசிய, மாநில, மண்டல மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுச் சான்றிதழ்களின் கூட்டு மதிப்பெண் கணக்கீடு:

சூத்திரம்: கடந்த 4 கல்வி ஆண்டுகளில் (9, 10, 11, 12-ஆம் வகுப்பு) பெற்ற சான்றிதழ்களில், ஒரு கல்வி ஆண்டிற்கு 1 அதிகபட்ச சாதனை மட்டுமே மதிப்பெண்ணுக்கு ஏற்கப்படும் (அதிகபட்சம் 4 சான்றிதழ்கள்).
🥇 12-ஆம் வகுப்பு
12th Std (Year 4)
0 மதிப்பெண்
🥈 11-ஆம் வகுப்பு
11th Std (Year 3)
0 மதிப்பெண்
🥉 10-ஆம் வகுப்பு
10th Std (Year 2)
0 மதிப்பெண்
🏅 9-ஆம் வகுப்பு
9th Std (Year 1)
0 மதிப்பெண்
உங்கள் விளையாட்டு மொத்த மதிப்பெண் (Cumulative Sports Score):
0
சான்றிதழ்களைத் தேர்ந்தெடுத்து மதிப்பெண் அறியவும்
📄
அரசாணை விளையாட்டு இடஒதுக்கீட்டுப் படிவத்தை (PDF) பதிவிறக்க விரும்புகிறீர்களா?
தேவையெனில் உங்கள் படிப்பு (மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை, துணை மருத்துவம், சட்டம்) மற்றும் நீங்கள் சான்றிதழ் வைத்துள்ள குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான விவரங்களை மட்டும் உள்ளிட்டு அதிகாரப்பூர்வ A4 படிவத்தைப் பெறலாம்.
🏆 தமிழ்நாடு முக்கிய உயர்கல்வி சேர்க்கைகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு விவரம் (Seat Matrix for Eminent Sports Persons Quota):

தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக அரசாணைகளின்படி (GO Ms No. & Prospectus), சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான (Eminent Sports Persons) சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வி மற்றும் பட்டப்படிப்புகளில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் அதிகாரப்பூர்வ பட்டியல்:

வ.எண் படிப்பு & துறை (Course / Discipline) சேர்க்கை வாரியம் / பல்கலைக்கழகம் ஒதுக்கப்பட்ட இடங்கள் முக்கிய தகுதி & சேர்க்கை முறை
1 🩺 அரசு மருத்துவப் படிப்புகள் (MBBS / BDS) DME மருத்துவக் கல்வி இயக்ககம் 15 இடங்கள்
(13 MBBS + 2 BDS)
நீட் குறைந்தபட்ச தகுதி போதுமானது. விளையாட்டு சான்றிதழ் கூட்டு மதிப்பெண் (Rank list) அடிப்படையில் நேரடி சேர்க்கை.
2 📐 பொறியியல் சேர்க்கை (B.E / B.Tech - TNEA) அண்ணா பல்கலைக்கழகம் / DOTE 500 இடங்கள்
(சிறப்பு இடஒதுக்கீடு)
+2 கணிதம், இயற்பியல், வேதியியல் தேர்ச்சி. 4 ஆண்டு விளையாட்டுச் சான்றிதழ் கூட்டு மதிப்பெண் (190-க்கு) அடிப்படையில் கவுன்சிலிங்.
3 🌾 வேளாண்மை & தோட்டக்கலை (B.Sc Agri / Horti) TNAU தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 40+ இடங்கள்
(உறுப்புக் கல்லூரிகளில்)
+2 அறிவியல் பாடங்களில் தேர்ச்சி மற்றும் விளையாட்டுச் சான்றிதழ்கள் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு.
4 🐾 கால்நடை மருத்துவம் & தொழில்நுட்பம் (BVSc & B.Tech) TANUVAS கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் 8 இடங்கள்
(5 BVSc + 3 B.Tech)
சென்னை, நாமக்கல், நெல்லை, ஒரத்தநாடு கல்லூரிகளில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புத் தரவரிசைப்படி சேர்க்கை.
5 🐟 மீன்வள அறிவியல் & பொறியியல் (B.F.Sc) TNJFU தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெ. மீன்வளப் பல்கலை. 5 இடங்கள்
(3 B.F.Sc + 2 B.Tech)
நாகப்பட்டினம் & தூத்துக்குடி மீன்வளக் கல்லூரிகளில் சிறப்பு ஒதுக்கீடு.
6 ⚖️ சட்டப் படிப்புகள் (5-Year Integrated B.A. LL.B.) TNDALU அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 14 இடங்கள்
(4 SOEL + 10 அரசு சட்டக் கல்லூரிகள்)
SOEL சென்னை வளாகம் மற்றும் மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட அரசு சட்டக் கல்லூரிகளில் விளையாட்டு ஒதுக்கீடு.
7 🩺 அரசு துணை மருத்துவப் படிப்புகள் (B.Pharm, B.Sc Nursing, BPT) DME துணை மருத்துவக் குழு 20+ இடங்கள்
(அரசு மருத்துவக் கல்லூரிகள்)
துணை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சிறப்பு விளையாட்டுப் பிரிவு கலந்தாய்வு.
8 🏛️ அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் (B.A / B.Sc / B.Com) TNGASA கல்லூரி கல்வி இயக்ககம் (DCE) 3% இடஒதுக்கீடு
(அனைத்து அரசு கல்லூரிகளிலும்)
ஒவ்வொரு கலை மற்றும் அறிவியல் இளநிலைப் பாடப்பிரிவிலும் விளையாட்டு வீரர்களுக்கு 3% கிடைமட்ட இடஒதுக்கீடு உண்டு.
9 ⚙️ பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகள் (Polytechnic Diploma) தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DOTE) தலா 2 இடங்கள்
(ஒவ்வொரு பாடப்பிரிவிலும்)
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் விளையாட்டுச் சான்றிதழ் அடிப்படையில் சேர்க்கை.
📌 முக்கியக் குறிப்பு: விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், தாங்கள் சேரும் கல்லூரி / பல்கலைக்கழகத்தின் சார்பாக விளையாட்டுப் போட்டிகளில் கட்டாயம் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும்.

✍️ 1. தேசிய & மாநில அளவிலான நுழைவுத் தேர்வு வழிகாட்டல் நெறிமுறைகள்

நுழைவுத்தேர்வு வழிகாட்டல்

அகில இந்திய அளவிலான உயர்தர மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான அனுமதி நெறிமுறைகள்:

🩺 NEET UG (மருத்துவம் & பல் மருத்துவம்)
படிப்புகள்: MBBS, BDS, BSMS (சித்த மருத்துவம்), BAMS, BHMS, BUMS.
சேர்க்கை முறை: 15% அகில இந்திய ஒதுக்கீடு (MCC கலந்தாய்வு) மற்றும் 85% தமிழ்நாடு மாநில அரசு இடஒதுக்கீடு (TN Health கலந்தாய்வு).
7.5% சலுகை: அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி 7.5% உள்ஒதுக்கீடு மற்றும் 100% முழு கட்டண விலக்கு.
📐 JEE Main & Advanced (IIT, NIT, IIIT)
படிப்புகள்: B.Tech, B.E., B.Arch, Integrated M.Tech.
நிறுவனங்கள்: 23 IITs (JEE Advanced மூலம்), 31 NITs, 26 IIITs மற்றும் மத்திய அரசு நிதியுதவி பெறும் 38+ கல்வி நிறுவனங்கள் (GFTIs).
கலந்தாய்வு: JoSAA (Joint Seat Allocation Authority) மற்றும் CSAB ஸ்பெஷல் ரவுண்டுகள்.
🏛️ CUET UG (மத்தியப் பல்கலைக்கழகங்கள்)
படிப்புகள்: B.A., B.Sc, B.Com, Integrated M.A., B.Voc.
நிறுவனங்கள்: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN - திருவாரூர்), டெல்லி பல்கலைக்கழகம் (DU), JNU, BHU உட்பட 45+ மத்தியப் பல்கலைக்கழகங்கள்.
🔬 IAT & NEST (அறிவியல் ஆராய்ச்சி)
படிப்புகள்: 5-Year BS-MS Dual Degree & Research Programs.
நிறுவனங்கள்: 7 IISER கல்வி நிறுவனங்கள் (திருவனந்தபுரம், திருப்பதி, புனே, போபால் போன்றவை), IISc பெங்களூரு (IAT மூலம்) மற்றும் NISER புவனேஸ்வர் (NEST மூலம்).
⚖️ CLAT (தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள்)
படிப்புகள்: B.A. LL.B. (Hons), B.B.A. LL.B. (Hons).
நிறுவனங்கள்: திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (TNNLU) உட்பட நாடு முழுவதும் உள்ள 26 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் (NLUs).
💼 NIFT, NID & CA / CMA / CS
வடிவமைப்பு: NIFT (சென்னை வளாகம் உட்பட 18 மையங்கள்), NID மற்றும் UCEED (IIT Design).
தொழில்முறை கணக்கியல்: ICAI - CA Foundation, ICMAI - CMA Foundation, ICSI - CSEET தேர்வுகள்.

🎯 2. தமிழ்நாடு அரசு நேரடிச் சேர்க்கைப் படிப்புகளின் வழிகாட்டல் நெறிமுறைகள்

நேரடிச் சேர்க்கை வழிகாட்டல்

நுழைவுத் தேர்வுகள் எதுவுமின்றி, +2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அல்லது 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் முக்கிய துறைகள்:

📐 பொறியியல் நேரடிச் சேர்க்கை (TNEA)
கணிதம், இயற்பியல், வேதியியல் மதிப்பெண்களை 200-க்கு மாற்றி, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் B.E. / B.Tech சேர்க்கை.
🔬 அரசு கலை & அறிவியல் (TNGASA)
தமிழ்நாட்டின் 164+ அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் B.Sc (அறிவியல்), B.Com, BBA, BCA, B.A. படிப்புகளுக்கான குறைந்த கட்டண ஒற்றைச் சாளர சேர்க்கை.
🐾 கால்நடை, துணை மருத்துவம் & செவிலியர்
TANUVAS B.Tech (உணவு/பால்/கோழிப்பண்ணை தொழில்நுட்பம்) மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் B.Sc நர்சிங், பார்மசி, BPT போன்ற 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் நேரடிச் சேர்க்கை.
⚖️ டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
சென்னை சீர்மிகு சட்டப் பள்ளி (SOEL) மற்றும் காரைக்குடி, மதுரை, திருச்சி உட்பட தமிழ்நாட்டின் 14+ அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த LL.B. நேரடிச் சேர்க்கை.
🌿 வேளாண்மை, தோட்டக்கலை & மீன்வளம்
TNAU வழியே B.Sc (Hons) Agriculture, Horticulture, Forestry மற்றும் TNJFU வழியே B.F.Sc மீன்வள அறிவியல், B.Tech பிஷரிஸ் என்ஜினீயரிங் நேரடிச் சேர்க்கை.
⚙️ பாலிடெக்னிக் டிப்ளமோ & அரசு ITI
10-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 3 ஆண்டு பாலிடெக்னிக் டிப்ளமோ (DOTE) மற்றும் 8th/10th தேர்ச்சி அடிப்படையில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் அரசு ITI தொழிற்பயிற்சிகள்.

🏛️ தமிழ்நாடு அரசின் 69% & மத்திய கல்வி நிறுவனங்களின் இடஒதுக்கீட்டுக் கட்டமைப்பு

சமூக நீதி இடஒதுக்கீடு
⚖️
இடஒதுக்கீட்டு வேறுபாடுகள்: தமிழ்நாட்டின் மாநில அரசு சேர்க்கைகளில் (TNEA, TNGASA, TN Health) 69% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அகில இந்திய மத்திய கல்வி நிறுவனங்களில் (IIT, NIT, AIIMS, Central Universities) மத்திய அரசின் EWS (10%), OBC-NCL (27%), SC (15%), ST (7.5%) இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது.

A. தமிழ்நாடு அரசின் 69% சமூக இடஒதுக்கீடு (State Quota Admissions):

பிரிவு சமூகப் பிரிவு (Community) இடஒதுக்கீடு % தகுதி & முக்கியக் குறிப்புகள்
OC பொதுப் போட்டி (Open Competition) 31.0% அனைத்துச் சமூகத்தினரும் தகுதி மதிப்பெண் அடிப்படையில் போட்டியிடலாம்.
BC பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward Classes) 26.5% தமிழ்நாடு அரசின் அங்கீகரிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் தவிர்த்து).
BCM பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - முஸ்லிம் (BC Muslims) 3.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள முஸ்லிம் சமூக மாணவர்களுக்கான பிரத்யேக உள்ஒதுக்கீடு.
MBC / DNC மிகவும் பிற்படுத்தப்பட்டோர் & சீர்மரபினர் 20.0% MBC மற்றும் சீர்மரபினர் (DNC) மாணவர்களுக்கான இடஒதுக்கீடு.
SC ஆதிதிராவிடர் (Scheduled Castes) 15.0% ஆதிதிராவிட மாணவர்களுக்கான இடஒதுக்கீடு (முழு கல்விக் கட்டண விலக்கு சலுகை உண்டு).
SCA அருந்ததியர் (SC - Arunthathiyar) 3.0% ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூக மாணவர்களுக்கான பிரத்யேக உள்ஒதுக்கீடு.
ST பழங்குடியினர் (Scheduled Tribes) 1.0% வருவாய்க் கோட்டாட்சியர் (RDO) வழங்கிய நிரந்தர சாதிச் சான்றிதழ் கட்டாயம்.

B. மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் இடஒதுக்கீட்டு முறை (Central Admissions - JoSAA, NEET AIQ, CUET):

பிரிவு சமூகப் பிரிவு (Category) ஒதுக்கீடு % தேவையான சான்றிதழ் படிவம்
GEN-EWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவு 10.0% மத்திய அரசு விதிகளின்படி வட்டாட்சியர் வழங்கிய EWS சான்றிதழ்.
OBC-NCL இதர பிற்படுத்தப்பட்டோர் (Non-Creamy Layer) 27.0% மத்தியப் பட்டியலில் உள்ள சாதிகளுக்கான Central OBC-NCL Certificate.
SC ஆதிதிராவிடர் (Scheduled Castes) 15.0% மத்திய அரசு பார்மட்டிலான SC Community Certificate.
ST பழங்குடியினர் (Scheduled Tribes) 7.5% மத்திய அரசு பார்மட்டிலான ST Community Certificate.
PwD மாற்றுத்திறனாளிகள் (Persons with Disabilities) 5.0% அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வாரியத்தால் வழங்கப்பட்ட 40%+ மாற்றுத்திறனாளி அட்டை.

🎯 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு & சலுகைகள்

தமிழ்நாடு அரசின் புரட்சிகரத் திட்டம்
🩺 மருத்துவக் கல்வி (Act 34/2020)
அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எளிய முறையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS, ஆயுஷ் படிப்புகளில் சேர 7.5% பிரத்யேக இடஒதுக்கீடு.
📐 தொழிற்கல்வி படிப்புகள் (Act 14/2021)
பொறியியல் (Engineering), வேளாண்மை (Agriculture), சட்டம் (Law), கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% தனி இடஒதுக்கீடு.
🎓 100% முழுக் கட்டண விலக்கு
7.5% ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான முழு கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணத்தை அரசே நேரடியாக ஏற்கிறது.
💰 நீங்கள் பெறக்கூடிய அரசு சலுகைகள் & உதவித்தொகையைக் கண்டறியும் கருவி

கீழே உள்ள விவரங்களைத் தேர்வு செய்தால், நீங்கள் பெறத் தகுதியான தமிழ்நாடு அரசு நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவிகள் உடனடியாகத் திரையில் பட்டியலிடப்படும்:

🎉 நீங்கள் பெறத் தகுதியான முக்கிய நலத்திட்டங்கள்:

📄 சேர்க்கைக்குத் தேவையான சான்றிதழ்கள் சரிபார்ப்பு பட்டியல் (14 ஆவணங்கள்)

சான்றிதழ்கள் தயார் நிலை

நுழைவுத் தேர்வு அல்லது நேரடிச் சேர்க்கை கவுன்சிலிங்கிற்குச் செல்லும் முன் உங்களிடம் உள்ள ஆவணங்களை டிக் செய்து தயார் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

சான்றிதழ்கள் தயார் நிலை: 0 / 14 தயார் (0%)

🔄 ஒற்றைச் சாளர கலந்தாய்வு 6 முக்கிய படிநிலைகள்

சேர்க்கை நடைமுறை வழிகாட்டல்
1

இணையவழி பதிவு & விண்ணப்பம் சமர்ப்பித்தல் (Online Registration)

சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ போர்ட்டலில் (TNEA, TNGASA, TN Medical, JoSAA போன்றவை) தனிப்பட்ட விவரங்கள், கல்வி மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டு விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல்.

2

ரேண்டம் எண் ஒதுக்கீடு & சான்றிதழ் பதிவேற்றம் (Random Number & Upload)

ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வரிசை நிர்ணயிக்க சமவாய்ப்பு எண் (Random Number) ஒதுக்கப்படும். தொடர்ந்து அசல் சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றுதல் அல்லது சரிபார்த்தல் நடைபெறும்.

3

தரவரிசைப் பட்டியல் வெளியீடு (Rank List Publication)

விண்ணப்பதாரர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் மற்றும் சமூக இடஒதுக்கீடு அடிப்படையில் மாநில அளவிலான பொதுத் தரவரிசை (Overall Rank) மற்றும் சமூகத் தரவரிசைப் பட்டியல் (Community Rank) வெளியிடப்படும்.

4

கலந்தாய்வு & விருப்பக் கல்லூரிகள் தேர்வு (Choice Filling)

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை முன்னுரிமை வரிசைப்படுத்தி (Priority 1, 2, 3...) தேர்வு செய்து குறித்த நேரத்திற்குள் லாக் (Lock Choices) செய்தல் வேண்டும்.

5

தற்காலிக & இறுதி இடஒதுக்கீடு ஆணை (Seat Allotment Order)

மாணவரின் கட்-ஆஃப், இடஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை அடிப்படையில் கல்லூரி இடம் ஒதுக்கப்படும். மாணவர் ஒதுக்கீட்டை உறுதிசெய்து சேர்க்கை ஆணையைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

6

கல்லூரியில் அசல் சான்றிதழ்களுடன் சேருதல் (College Reporting)

ஒதுக்கீட்டு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு நேரில் சென்று அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து சேர்க்கையை உறுதி செய்தல் வேண்டும்.

📞 14417 இலவச உதவி மையத்தின் விரிவான வழிகாட்டல் சேவைகள்

மாநில அளவிலான உதவி மையம்

தலைமைச் செயலகக் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் இயங்கும் 14417 இலவச உதவி எண் வாயிலாக தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வழங்கப்படும் முக்கிய வழிகாட்டல் சேவைகள்:

🎯 உயர்கல்வி சேர்க்கை ஆலோசனைகள்
• NEET UG, JEE Main / Advanced, CUET UG, CLAT, NATA, IMU CET விண்ணப்ப முறைகள்.
• பொறியியல் (TNEA), மருத்துவம் (TN Medical), கால்நடை (TANUVAS), வேளாண்மை (TNAU) கலந்தாய்வு நெறிமுறைகள்.
• அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஒற்றைச் சாளர சேர்க்கை (TNGASA).
🎁 அரசு நலத்திட்டங்கள் & சலுகைகள்
• 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு: 6-12 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழு கல்விக் கட்டண விலக்கு வழிகாட்டல்.
• மாதம் ₹1,000 உதவித்தொகை: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டப் பதிவு.
• முதல் தலைமுறை பட்டதாரி (First Graduate) சலுகை மற்றும் சான்றிதழ் வழிகாட்டுதல்.
💳 கல்விக் கடன் & உதவித்தொகை
• மத்திய அரசின் PM-Vidyalaxmi போர்ட்டல் வழியாக பிணையில்லா கல்விக் கடன் பெறும் முறைகள்.
• போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் (SC/ST/SCC/BC/MBC/Minority) விண்ணப்ப வழிமுறைகள்.
• மத்திய அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் சிறப்பு உதவித்தொகைகள்.

🏢 மாவட்ட உயர்கல்வி வழிகாட்டல் மையங்கள் (District Cells)

மாவட்ட ஒருங்கிணைப்பு நெட்வொர்க்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் (CEO Office) செயல்படும் வழிகாட்டல் ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்பு விவரங்கள் (பெயரைக் கொண்டு உடனடியாகத் தேடலாம்):

🔍
🏛️சிவகங்கை மாவட்டம் — மாவட்ட உயர்கல்வி வழிகாட்டி மையம்
CAREER GUIDANCE CENTER • DISCOVER | PLAN | SUCCEED
முதன்மை தலைமை மையம்
🏢
மைய அலுவலகம்:
மாவட்ட ஆட்சியரகம், சிவகங்கை - 630562.
☎️
மையத் தொலைபேசி எண்:
04575-246233 அழைக்க
✉️
மின்னஞ்சல் முகவரி:
[email protected]
🌐
அதிகாரப்பூர்வ இணையதளங்கள்:
⏰
பணி நேரம்:
திங்கள் – வெள்ளி (காலை 10:00 – மாலை 5:45 வரை)
🎯
மையத்தின் வழிகாட்டல் நோக்கம்:
மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக — உங்கள் எதிர்காலம்... உங்கள் தேர்வு!
👥 வழிகாட்டும் குழு (Guide Teachers Team)
நேரடி வழிகாட்டல் தொடர்பு
1
திருமதி. உஷா
விரிவுரையாளர்
🏫 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (DIET), காளையார்கோவில்
2
திரு. முத்துராமலிங்கம்
முதுகலை ஆசிரியர்
🏫 அரசு மேல்நிலைப்பள்ளி, பீர்க்கலைக்காடு
3
திரு. சிங்காரவேலு
முதுகலை ஆசிரியர்
🏫 அரசு மேல்நிலைப்பள்ளி, ஒ.சிறுவயல்
4
திரு. ராஜபாண்டி
முதுகலை ஆசிரியர்
🏫 அரசு மேல்நிலைப்பள்ளி, இடைக்காட்டூர்
5
திரு. சந்திரசேகரன்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
🏛️ மாவட்ட உயர்கல்வி வழிகாட்டல் மையம், சிவகங்கை
வ. எண் பெயர் (Name) பதவி & நிறுவனம் / பள்ளி தொலைபேசி எண் (தொடர்புக்கு)
1 திருமதி. உஷா விரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (DIET), காளையார்கோவில் 📞88387 55505
2 திரு. முத்துராமலிங்கம் முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பீர்க்கலைக்காடு 📞98434 37037
3 திரு. சிங்காரவேலு முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஒ.சிறுவயல் 📞94438 30044
4 திரு. ராஜபாண்டி முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, இடைக்காட்டூர் 📞88839 45240
5 திரு. சந்திரசேகரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சிவகங்கை 📞99439 82695
மதுரை மாவட்டம் (Madurai) மண்டல மையம்
அலுவலகம்: முதன்மைக் கல்வி அலுவலகம், தல்லாகுளம், மதுரை - 625002.
பொறுப்பு: மாவட்ட தொழில் வழிகாட்டல் ஒருங்கிணைப்புக் குழு.
மின்னஞ்சல்: [email protected]
பணி நேரம்: வேலை நாட்களில் காலை 10:00 - மாலை 5:30
சென்னை மாவட்டம் (Chennai) தலைமையகம்
அலுவலகம்: முதன்மைக் கல்வி அலுவலகம், DPI வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை.
பொறுப்பு: சென்னை மாவட்ட உயர்கல்வி ஒருங்கிணைப்புப் பிரிவு.
மின்னஞ்சல்: [email protected]
பணி நேரம்: வேலை நாட்களில் காலை 10:00 - மாலை 5:45
திருச்சிராப்பள்ளி (Trichy) மத்திய மண்டலம்
அலுவலகம்: முதன்மைக் கல்வி அலுவலகம், பழைய நீதிமன்ற வளாகம், திருச்சி.
பொறுப்பு: திருச்சி மாவட்ட தொழில் வழிகாட்டல் மையம்.
மின்னஞ்சல்: [email protected]
பணி நேரம்: வேலை நாட்களில் காலை 10:00 - மாலை 5:30

❓ அடிக்கடி கேட்கப்படும் பொதுவான வினாக்கள் (FAQs)

அறிவுத் தொகுப்பு (Knowledge Base)

7.5% இடஒதுக்கீடு, கட்டணச் சலுகைகள் மற்றும் கட்-ஆஃப் குறித்த மாணவர்களின் முக்கிய சந்தேகங்கள்:

🔍
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை (Classes 6 to 12) முழுமையாகத் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு பொருந்தும். அரசு உதவிபெறும் (Govt Aided) பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை, சட்டம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு இது பொருந்தும்.
ஆம்! 7.5% ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறும் மாணவர்களின் கல்விக் கட்டணம் (Tuition Fee), விடுதிக் கட்டணம் (Hostel Fee), உணவுக் கட்டணம் மற்றும் கலந்தாய்வுக் கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே 100% முழுமையாக ஏற்கும்.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்து உயர்கல்வி (Degree / Diploma / ITI) பயிலும் மாணவிகளுக்கு 'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழும், மாணவர்களுக்கு 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் கீழும் மாதம் ₹1,000 வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது.
• BNYS: இயற்கை மருத்துவம் & யோகா (5½ ஆண்டுகள்).
• TANUVAS: கால்நடை மருத்துவம் (B.V.Sc & A.H.) மற்றும் B.Tech உணவுத் தொழில்நுட்பம்.
• துணை மருத்துவம்: B.Sc Nursing, B.Pharm, BPT உடற்பயிற்சி மருத்துவம், B.Sc Radiography, B.Sc MLT போன்ற 19 படிப்புகள் +2 மதிப்பெண் அடிப்படையில் நேரடியாகச் சேர்க்கை செய்யப்படுகின்றன.
TNEA பொறியியல் கட்-ஆஃப் மொத்தம் 200 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்படுகிறது: கணிதம் (100) + [இயற்பியல் ÷ 2] (50) + [வேதியியல் ÷ 2] (50).

🌐 அனைத்து முக்கிய உயர்கல்வி போர்ட்டல்களின் அதிகாரப்பூர்வ டைரக்டரி

அதிகாரப்பூர்வ தளங்கள்

A. நுழைவுத் தேர்வு சார்ந்த தேசிய போர்ட்டல்கள்:

🩺 NTA NEET & MCC Medical
நீட் தேர்வு பதிவு மற்றும் அகில இந்திய 15% மருத்துவக் கலந்தாய்வு போர்ட்டல்.
🌐 neet.nta.nic.in ↗
📐 NTA JEE & JoSAA IIT / NIT
JEE Main தேர்வு மற்றும் IIT, NIT, IIIT பொறியியல் இடஒதுக்கீட்டுக் கலந்தாய்வு.
🌐 josaa.nic.in ↗
🏛️ CUET UG மத்தியப் பல்கலைக்கழகங்கள்
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உட்பட அனைத்து Central Universities சேர்க்கை.
🌐 exams.nta.ac.in/CUET-UG ↗
⚖️ CLAT தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள்
Consortium of National Law Universities (NLUs) அகில இந்திய கலந்தாய்வு.
🌐 consortiumofnlus.ac.in ↗
🔬 IISER IAT அறிவியல் ஆராய்ச்சி
7 IISER நிறுவனங்கள் மற்றும் IISc பெங்களூரு ஆராய்ச்சி சேர்க்கை போர்ட்டல்.
🌐 iiseradmission.in ↗
👗 NIFT தேசிய ஃபேஷன் டெக்னாலஜி
சென்னை உட்பட அனைத்து தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கல்வி வளாகங்கள் சேர்க்கை.
🌐 nift.ac.in ↗

B. தமிழ்நாடு அரசு நேரடிச் சேர்க்கை போர்ட்டல்கள்:

📐 TNEA பொறியியல் நேரடிச் சேர்க்கை
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகள் பொறியியல் ஒற்றைச் சாளர சேர்க்கை.
🌐 tneaonline.org ↗
🔬 TNGASA அரசு கலை & அறிவியல்
தமிழ்நாட்டின் 164+ அரசு கலை அறிவியல் கல்லூரிகள் B.A., B.Sc, B.Com சேர்க்கை போர்ட்டல்.
🌐 tngasa.in ↗
🏥 TN Medical & Paramedical
அரசு மருத்துவக் கல்லூரிகள் 85% மாநில இடங்கள் மற்றும் பாராமெடிக்கல் சேர்க்கை.
🌐 tnhealth.tn.gov.in ↗
⚖️ TNDALU தமிழ்நாடு சட்டப் படிப்பு
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் & அரசு சட்டக் கல்லூரிகள் 5 ஆண்டு LL.B. சேர்க்கை.
🌐 tndalu.ac.in ↗
🐾 TANUVAS கால்நடை சேர்க்கை
கால்நடை மருத்துவம் (BVSc & AH) மற்றும் உணவுத் தொழில்நுட்ப B.Tech படிப்புகள்.
🌐 tanuvas.ac.in ↗
🌿 TNAU வேளாண்மை சேர்க்கை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் & தோட்டக்கலை இளநிலை அறிவியல் படிப்புகள்.
🌐 tnau.ac.in ↗